நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 96வது பிறந்தநாள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மரியாதை செலுத்தினார்.

by Editor / 01-10-2023 01:22:31pm
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 96வது பிறந்தநாள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மரியாதை செலுத்தினார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நடிகர் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். மணிமண்டபத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகர் பிரபு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி சென்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு கூறியதாவது:மூன்று வருடங்களாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகிறார். அதற்கு என் தந்தை மீது உள்ள பாசம் தான் காரணம். கருணாநிதி , எம்ஜி ஆர், சிவாஜி கணேசன் என மூவரின் சிலையும் ஒரே இடத்தில் இருப்பது அவர்களின் ஒற்றுமையை காட்டுகிறது. இவ்வாறு பிரபு கூறினார்.

 

Tags : நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 96வது பிறந்தநாள்

Share via