பிரதமர் நரேந்திர மோடி ஓராண்டிற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்

by Admin / 11-05-2026 10:53:39am
பிரதமர் நரேந்திர மோடி ஓராண்டிற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி ஓராண்டிற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு தங்கம் இறக்குமதி செய்வதால் அந்நிய செலவாணி கையிருப்பு பாதிக்கப்படுகிறது என்றும் நாட்டின் பொருளாதார நலன் கருதி ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் பொதுமக்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் மெட்ரோ மற்றும் மின்சார வாகனங்களை பயன்படுத்தும் மாறும் அறிவுறுத்தியதோடு கோவிட் காலத்தைப் போலவே தற்போதைய சூழ்நிலையிலும் முடிந்தவரை வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை தொடருமாறும் வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு உல்லாச பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் வெளிநாடுகளில் திருமணங்கள் செய்வதை தவிர்க்கு மாறும் தம் வேண்டுகோளை வைத்துள்ளார். மேற்காசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால் இந்திய பொருளாதாரத்தின் மீது ஓர் அழுத்தம் உருவாகி உள்ள சூழலில் இதுபோன்ற தேவையை மனதில் வைத்து பொதுமக்கள் உதவுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo