மீண்டும் பா.ஜ.க.வில் அண்ணாமலை முன்னிலையில் இணைந்தார் ரஜினியின் அரசியல் ஆலோசகராக இருந்த அர்ஜீன மூர்த்தி

by Admin / 22-08-2022 09:00:11pm
மீண்டும் பா.ஜ.க.வில் அண்ணாமலை முன்னிலையில் இணைந்தார் ரஜினியின் அரசியல் ஆலோசகராக இருந்த அர்ஜீன மூர்த்தி
ரஜினியின்  அரசியல்  ஆலோசகராக  இருந்தவர் அர்ஜீன மூர்த்தி.இவர் பா.ஜ.கட்சியின் அறிவு சார் பிரிவின் மாநிலத்தலைவராக  இருந்தார்.  ரஜினி காந்த்  அரசியல் கட்சியை  ஆரம்பிக்க இருந்த நிலையில் ,அவருடன்  இணைந்து புதிய கட்சி பணிகளை  மேற்கொள்ள இவரும்  தமிழிலருவி மணியனும்   இணைந்து  செயல்படுவதற்கு   ஏதுவாக   அர்ஜீனமூர்த்தி   தம்     பா.ஜ .  கட்சியின் பொறுப்பிலிருந்து  விலகி,  ரஜனியின்  கட்சி பணிகளில் ஈடுபட்டார். இந்நிலையில் ,ரஜினி தம்
உடல்நிலையை  காரணம்  காட்டி  கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை  என்று அறிவித்தார். அதனால், அர்ஜின  மூர்த்தி  அகில  இந்திய மக்கள்  முன்னேற்றக்கட்சி யைத் தொடங்கினார் .  அதற்குச் சரியான  வரவேற்பு   இல்லாத  நிலையில்  இன்று  மீண்டும்   பா.ஜ.க .வில்    அண்ணாமலை  முன்னிலையில்   இணைந்தார்    ,அர்ஜினமூர்த்தி  .இவருக்கு மீண்டும் கட்சி பணி வழங்குவார்களா என்பது  இனி தான்தெரியும்
மீண்டும் பா.ஜ.க.வில் அண்ணாமலை முன்னிலையில் இணைந்தார் ரஜினியின் அரசியல் ஆலோசகராக இருந்த அர்ஜீன மூர்த்தி
 
Tags :

Share via

More stories