தயாநிதி மாறன் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் மோசடி

by Staff / 10-10-2023 12:19:57pm
தயாநிதி மாறன் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் மோசடி

திமுக எம்.பி. தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் மோசடி செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தயாநிதி உடைய செல்போன் எண்ணிற்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து போன் செய்த நபர்கள் ஆக்சிஸ் வங்கியில் இருந்து பேசுவது போல இந்தியில் பேசிய நபர்கள் 3 முறை அழைத்த பின், திடீரென ஒரே பரிவர்த்தனையில் ரூ.1 லட்சம் எடுக்கப்பட்டதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தயாநிதி மாறனின் மனைவி மலேசியாவில் இருப்பதாகவும், அவருக்கு செல்போனில் இந்த அழைப்புகள் வந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories