வரதட்சணை கொடுமை. காவலர் கைது

மதுரை, காதக்கிணற்றில் வசிக்கும் பூபாலன் (35) என்பவர் மதுரை அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் போலீசாரராக உள்ளார். இவரது தந்தை செந்தில்குமார், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளராக உள்ளார். பூபாலனுக்கு மனைவி தங்கப்ரியா (30) மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.
இருவருக்கும் 2017ல் திருமணம் நடந்தது. இருவருக்கும் குடும்ப பிரச்சினை நீடித்து வந்த நிலையில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, தன்னை துன்புறுத்துவதாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது தங்கப்ரியா போலீசில் புகார் அளித்த நிலையில் தலைமறைவாக உள்ள பூபாலன், செந்தில்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை காவலர் கைது செய்யப்பட்டார். பூபாலன் தனது சகோதரியிடம் செல்போனில் பேசிய ஆடியோ வைரலாகியுள்ளது.
Tags :