தவெகவுக்கு ஜனநாயக முஸ்லிம் கட்சி திடீர் ஆதரவு

10 ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் இருந்த ஜனநாயக முஸ்லிம் கட்சி திடீரென விலகியுள்ளது. சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து ஜனநாயக முஸ்லிம் கட்சி ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஏற்கனவே தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி தவெக கூட்டணியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :