முதலமைச்சரின் மகனும் மருமகனும் சம்பாதிக்கவே ஆட்சி - அண்ணாமலை
தமிழகம் முழுவதும் கனிம வளங்களைக் கொள்ளையடித்து, முதலமைச்சரின் மகனும் மருமகனும் சம்பாதிக்கவே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக ஆட்சிக்கு வந்ததும், ஆற்று மணல் அள்ள பத்து ஆண்டுகளாக இருந்த தடையை நீக்கியது. முன்பெல்லாம் ஆற்றின் கரையில் மணல் எடுப்பார்கள். திமுக ஆட்சியில், ஆற்றினுள் மணல் திருடுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும், கனிம வளங்களைப் பாதுகாக்க தனி அமைச்சகம் அமைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால், வளங்களைக் கொள்ளையடிப்பதையே முழு வேலையாகச் செய்கிறார்கள் என விமர்சித்துள்ளார்.
Tags :



















