வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவியுங்கள் - அன்புமணி ராமதாஸ்

by Staff / 28-10-2023 01:40:35pm
வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவியுங்கள் - அன்புமணி ராமதாஸ்

காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும், சம்பா சாகுபடி இழப்புக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் குறுவை பருவத்தில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் கருகியும், ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் விளைச்சல் குறைந்தும் உழவர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. காவிரி பாசன மாவட்டங்கள் இன்று எதிர்கொள்ளும் அவல நிலைக்கு கர்நாடகத்திடமிருந்து உரிய தண்ணீரை பெறாதது தான் காரணமாகும். அதனால், காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via