திருநங்கையர்களின் பாதுகாப்பை கருதி அரண் இல்லங்களை திறந்து வைத்தார்,தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின். .

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திருநங்கையர்களின் பாதுகாப்பை கருதி அவர்கள் உரிய கல்வியை பெற பாதுகாப்பாக தங்கி படிப்பதற்கும் வேலை பார்ப்பதற்கும் ஆன சூழலை உருவாக்கும் பொருட்டு சென்னை செனாய் நகரிலும் மதுரை அண்ணா நகரில் சமூக நலத்துறை சார்பில் தொடங்கப்பட்ட அரண்இல்லங்களை திறந்து வைத்தார். அத்துடன் தொழிற்சாலைகளில் பணி புரியும் பெண்களின் குழந்தைகளுக்கு காப்பகங்களை திண்டிவனம் , தேனியிலும் தொடங்கி வைத்ததோடு, திருச்செந்தூர், திருவரங்கம், திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட திருக்கோயில்களில் 27 முடிவுற்ற பணிகளையும் மருதமலை உள்ளிட்ட நாலு திருக்கோயில்களில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பணி நியமனங்கள் ஆணை வழங்கியும் சட்டத்துறை சார்பில் மதுரை ,,வேலூர் அரசு சட்டக் கல்லூரிகளுக்கான புதிய கட்டடங்களை திறந்து வைத்தும் சுற்றுலாத்துறை சார்பில் ஜவ்வாது மலை ,கொல்லிமலை, பொன்னணி ஆறு அணை உள்ளிட்ட இடங்களில் முடிவுற்ற மேம்பாட்டு பணிகளை திறந்து வைத்து ஐந்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
Tags :