மசால் தோசை சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு
கேரளா: ஹோட்டலில் மசால் தோசை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்துள்ளார். ஹென்றி தனது மனைவி மற்றும் 3 வயது மகள் ஒலிவியாவுடன் ஹோட்டலுக்கு சென்று மசால் தோசை சாப்பிட்டார். பின்னர் ஹென்றிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மனைவி, மகளுக்கும் உடல் நலம் குன்றியது. மூவரும் மருத்துவ சிகிச்சை பெற்ற போது உடல் நிலை மோசமாகி ஒலிவியா உயிரிழந்தார். புட் பாய்சன் காரணமாக அவர் இறந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில் போலீஸ் விசாரிக்கிறது.
Tags :



















