பிளஸ் டூ மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

by Editor / 27-07-2022 03:45:51pm
பிளஸ் டூ மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சாக்கோட்டையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்ற நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அவரது இளைய மகன் செல்வகுமார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு உணவு அளிக்க இன்று அவரது சித்தப்பா சென்ற போது நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்காததால் உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. சரியாக படிப்பு வராததால் தற்கொலை செய்து கொள்கிறேன் என மாணவன் கடிதம் எழுதி வைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல என்றும் தற்கொலை எண்ணம் வந்தால் 104 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து ஆலோசனை பெறலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

Tags :

Share via

More stories