ஆசிரியையை தடுக்க முயற்சித்தும் தலை முடியை பிடித்து இழுத்து சண்டையிட்ட பள்ளி மாணவிகள்

by Editor / 27-07-2022 03:52:37pm
ஆசிரியையை தடுக்க முயற்சித்தும் தலை முடியை பிடித்து இழுத்து சண்டையிட்ட பள்ளி மாணவிகள்

நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் மாணவிகள் ஒருவரை ஒருவர் தலைமுடி பிடித்து  சண்டை போட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு உதவி பெறும்  சாரா டக்கர் பள்ளியில் வகுப்பு முடித்துவிட்டு நேற்று மாலை வீடு திரும்பும் வழியில் மாணவிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சண்டை பள்ளி ஆசிரியை தடுக்க முயற்சித்து விடாப்பிடியாக தலைமுடியை பிடித்து மாணவிகள் சண்டையிட்டனர். சமூக வலைத்தளங்களில் வெளியான காட்சிகளை வைத்து இன்று காலை  பள்ளிக்கு சென்று கைகலப்பில் ஈடுபட்ட மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பேருந்தில் இடம் பிடிப்பதற்காக முண்டியடித்து ஏற முயன்றபோது தகராறு ஏற்பட்டதாக மாணவிகள் கூறியதை அடுத்து அவர்களது பெற்றோர்களையும் வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via

More stories