மருத்துவ உதவியாளர் மரணம்

மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் குமார்(51). இவர் கோவை கொண்டையம் பாளையம் லட்சுமி கார்டன் பகுதியில் தங்கி, பூலுவபட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார துறையில் கண் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக சதீஷின் வீடு திறக்கப்படாமல் கிடந்தது. சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து சதீஷின் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் விரைந்து வந்து கதவை திறக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு சதீஷ்குமார் இறந்து கிடந்தார். மேலும் அவரது உடல் அருகே 100க்கும் மேற்பட்ட காலி மதுபாட்டில்கள் கிடந்தன. இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :