டீ குடிக்க சென்ற போலீசார்.. கைதிகள் தப்பியோட்டம்

by Staff / 22-09-2023 12:00:19pm
டீ குடிக்க சென்ற போலீசார்.. கைதிகள் தப்பியோட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி நீதிமன்றத்துக்கு இம்மாதம் 19ஆம் தேதி, ஏழு கைதிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் போலீஸ் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு போலீசார் டீ குடிக்க சென்றனர். இதனை சாதகமாக்கிக் கொண்ட கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல ரயில் நிலையங்களில் திருடியுள்ளனர். குற்றவாளிகளை தனிப்படையினர் தேடி வருகின்றனர். பணி நேரத்தில் அலட்சியமாக செயல்பட்ட 8 போலீஸ் காரர்களை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories