தைப்பூசம் அறுபடை வீடுகளில் தொடங்கி பத்து நாள் நிகழ்வுறும்

by Admin / 15-01-2024 11:13:17am
தைப்பூசம்  அறுபடை வீடுகளில் தொடங்கி  பத்து நாள் நிகழ்வுறும்

தைப்பூசம் வருகிற 19ஆம் தேதி அறுபடை வீடுகளில் வெகு விமர்சனையாக கொண்டாடப்படஇருக்கின்றது.கின்றது.. தை மாதம் தமிழர்களின் மிக முக்கியமான மாதம் இது தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த மாதம் .பத்தாவது  மாதம் பூசா  என்றும் பௌர்ணமி திதியில் வரும் பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் தைப்பூச திருவிழா தென் திராவிடப் பகுதிகளில் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும்  பழங்காலம் தொட்டே கொண்டாடப்பட்டு வருகின்றது.. முருகப்பெருமான் இப்பூசத் தினத்தன்று தருகாசுரனை வதம் செய்த நிகழ்வால் கொண்டாடப்படுகின்றது. சிவபெருமான் உமா தேவியுடன் ஆனந்த நடனமாடி தரிசனம் தந்த நாளும் தைப்பூசம் என்பர்.. தேவகுரு பிரகஸ்பதியினுடைய நட்சத்திரமும் பூச நட்சத்திரம். அதனால் தமிழ் கடவுளாக வழிபடும் முருகப்பெருமான் பள்ளி கொண்டிருக்கும் திருச்செந்தூர் ஸ்தலத்தை குரு ஸ்தலமாகவும் அங்கே எழுந்தருளி இருக்கும் முருகப்பெருமானை குருவாகவும் பார்க்கின்ற வழக்கம் தோன்றுதொட்டு தமிழர்களிடம் காணப்படுகின்றது..

தைப்பூசம் அன்று பழனி முருகனுக்கு மாலையிட்டு வழிபடுகின்ற நிகழ்வும் அரங்கேறும். .பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த தைப்பூசம்,. பழனியில் ஏழாம் திருவிழா தேரோட்டமும் பத்தாம் நாளில் தெப்ப உற்சவமுமாக நடைபெறும் .இக் கோவிலில் மிகச் சிறப்புக்களில் ஒன்று போகர் முருகனுடைய மூலச் சிலையை நவபாஷாணத்தால் பிரதிஷ்டை செய்து உள்ளது தான். மிக -மிக குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது.. இங்கு வழிபட்டு பிரசாதங்களை பெறுகிறவர்கள் தீராத நோய்களிலிருந்தும் தீராத துன்பங்களிலிருந்தும் விடுபடுவர் என்பது ஐதீகம்..

பழனி முருகனுக்கு அலகு குத்தி சர்க்கரை காவடி, தீர்த்த காவடி ,பறவை காவடி, பால் காவடி, மச்சக் காவடி, மயில் காவடி என்று எடுத்துக் கொண்டு வருகின்ற பக்தர்கள் உணர்ச்சி மேலிட்டால் முருகா முருகா என்று அழைப்பது.... விண்ணுலகம் வரை எட்டக்கூடிய ஆன்மீக பேரொலி யாக இருக்கும்.. தமிழகம் தாண்டி, இந்த முருக வழிபாடு இலங்கை யாழ்ப்பாணத்திலும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் மொரிசியிலும் தென்னாப்பிரிக்கா பிஜி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் தமிழர்கள் வாழ்ந்து வரும் அனைத்து நாடுகளிலும் மிகச் சிறப்பான ஒரு தமிழ் பண்டிகையாக கொண்டாடப்பகிறது..முருகன் தமிழ் கடவுள் என்பதால்அவன் பள்ளி கொண்டிருக்கும் இடமெல்லாம்.... முருகப்பெருமானின்  அருளைநாடி.... நாடு விட்டு நாடு,, கண்டம் விட்டு கண்டம் சென்ற தமிழர்கள் எல்லோரும் மறவாமல் தங்களுடைய ஒரு முக்கிய பண்டிகையாக,.... இந்த தை மாசத்தில்- தைப்பூசத்தை கொண்டாடி வருகிறார்கள். ..தமிழ்நாட்டை பொறுத்தவரை தைப்பூச திருவிழாவை தமிழ் பெருமக்கள் கொண்டாடும் விதமாக அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

தைப்பூசம்  அறுபடை வீடுகளில் தொடங்கி  பத்து நாள் நிகழ்வுறும்
 

Tags :

Share via