தூதரக அதிகாரிகளை வெளியேற்றுகிறது ரஷ்யா

by Admin / 23-02-2022 12:33:22pm
தூதரக அதிகாரிகளை வெளியேற்றுகிறது ரஷ்யா

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் எல்லையில் சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. 

இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன. 

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷ்யா நேற்று அங்கீகரித்தது. 

அந்நகரங்களில் படைகளை களமிறக்க அதிபர் புதின் உத்தரவிட்டதால், அந்தப் பகுதிகளில் ரஷ்யா தனது படைகளை நிலைநிறுத்தியது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. 
 
இந்நிலையில், போர் அச்சுறுத்தலால் உக்ரைனில் இருந்து தனது தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ரஷ்யா முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் ரஷ்ய தூதர்கள் பல அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகின்றனர். அவர்கள் விரைவில் அங்கிருந்து வெளியேற்றப்படுவர் எனவும் தெரிவித்துள்ளது. 

 

Tags :

Share via

More stories