ரேஷன் கடைகளில் நிவாரணம், மளிகை தொகுப்பு ஜூன் 15 முதல் பெறலாம்: அமைச்சர் சக்கரபாணி!

by Editor / 06-06-2021 07:54:15am
ரேஷன் கடைகளில் நிவாரணம், மளிகை தொகுப்பு ஜூன் 15 முதல் பெறலாம்: அமைச்சர் சக்கரபாணி!

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரம், 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பினை பொது விநியோகத் திட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் திட்டத்தைகடந்த 3-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இவற்றை வழங்குவதற்கான டோக்கன்கள், வரும் 11-ம் தேதிமுதல் 14-ம் தேதி வரை வழங்கப்படும். இந்த டோக்கன் அடிப்படையில், ஜூன் 15-ம் தேதி முதல்ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மக்கள் பெற்றுக் கொள்ளலாம். மளிகை தொகுப்பு மற்றும் நிவாரணத் தொகையை ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். குறித்த நாள், நேரத்தில் பெறஇயலாதவர்கள், வருகின்ற மாதத்தில் அவர்களுக்கான மளிகைப் பொருட்கள் தொகுப்புமற்றும் நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

 

Tags :

Share via

More stories