பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு - லட்சக்கணக்கில் பணம் பறிப்பு

by Editor / 21-07-2021 06:55:23pm
பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு - லட்சக்கணக்கில் பணம் பறிப்பு

 

பாஜகவின்ஒன்றிய அரசில் உள்துறை இணைஅமைச்சராகப் பதவியில் இருந்த கிஷன்ரெட்டி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர் தலில் மாநிலபொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்போதுஅவரது உதவியாளர் நரோத் தமன் என்பவர்ஆரணி பாஜக நகரத் தலைவர்புவனேஷ்வர் குமார் என்பவரிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்துள்ளதாக புகார்தெரிவித்தார்.
இந்த புகார் குறித்து புவனேஷ்வர் குமார், "ஒன்றிய உள் துறைஇணை அமைச்சராக இருந்த கிஷன் ரெட்டி தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் நேரத்தில் தமிழ்நாடு பா . ஜ . பொறுப்பாள ராக நியமிக்கப் பட்டார் . அவர் தேர்தல் நேரத்தில் சென்னை தியாகராயர் நகரில் தங்கினார் . அப்போது வடசென்னை அ . தி . மு . க . துணைச செயலர் விஜய ராமன் எனக்கு அறிமுகமானார் .
அமைச்சர் கிஷன் ரெட்டியின் உதவியாளர் நரோத்தமன் வாயிலாக அமைச்சரைச் சந்திக்க வைத்தார் ; ஒன்றிய அரசின் வாரியம் ஒன்றில் உறுப்பினர் பதவி வாங்கி கொடுப்பதாக நரோத்தமன் ஆசை வார்த்தை கூறியதால் கேட்ட பணத்தைக் கொடுக்க தயாரானேன் . மேலும் தேர்தலில் போட்டியிட அமைச் சர் வாய்ப்பு வழங்குவதாகக் கூறு கிறார் ' என நரோத்தமன் கூறினார் . வற்புறுத்தலுக்குப் பின் ஒப்புக் கொண்டேன் . ஆரணி தொகுதியில் போட்டியிட விரும்பி சுய விபரக் குறிப்பு கொடுத்தேன் . இதற்கு ஒரு கோடி ரூபாய் கேட்டனர் ;
நான் முதலில் 50 லட்சம் ரூபாய் கொடுக்கிறேன் என்றதும் உடனே பணத்தை எடுத்துக் கொண்டு சென்னை தியாகராய நகரில் உள்ள ஓட்டலுக்கு வரும்படி கூறினர் . அங்கே ஒரு தனி அறையில் தங்க வைத்தனர் ; பின் பணத்தைக் கேட் டனர் . நான் மறுத்ததால் தொகுதி அறிவிக்கப்பட்டதும் கொடுத் தால் போதும் என்றனர் .. முதல் கட்டமாக பா . ஜ . வுக்கான தொகு திகளை அ . தி . மு . க . அறிவித்த பட்டியலில் ஆரணி இல்லை ; ஆனால் திருவண்ணாமலை உள்ளதால் அங்குப் போட்டியிடுங்கள் என வற்புறுத்தினர் ; மறுத்து விட்டேன் . ஆகவே திரு வண்ணாமலை மாவட்ட பா . ஜ . துணைத் தலைவரான என் சகோதரி வசந்திக்கு அங்கு போட் டியிட இடம் வாங்கி தருகிறோம் என திசை மாற்றி அவர்கள் 50 லட்சம் ரூபாயை வாங்கி விட் டனர் . பா . ஜ . வேட்பாளர் பட்டி யலில் திருவண்ணாமலைக்குத் தணிகை வேலு வேட்பாளராகி விட்டார் . ஆயினும் வசந்தியை வேட்பு மனுத் தாக்கல் செய்யும்படி கூறினர் ; அதன்படி செய்தோம் . தணிகை வேலு வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலை யில் திரும்பப் பெற்று விட்டோம் . விஜயராமன் , நரோத்தமனிடம் பணத்தைத் திருப்பி கேட்டோம் ; காலம் கடத் தினர் .
இதையடுத்து தியாகராயர் நகரில் தேர்தல் வேலையில் இருந்த கிஷன் ரெட்டியைச் சந்தித்து நடந் ததைக் கூறினோம் . அவர் நரோத்த மனின் தந்தை சிட்டிபாபுவை அழைத்து ' பணத்தை செட்டில் செய்து விடுங்கள் ' என்றார் ; அவர்கள் தரவில்லை . எனவே மீண்டும் கிஷன் ரெட்டியைச் சந்தித்து முறையிட்டோம் . அவர் காவல் துறையில் புகார் செய்யும்படி சொன்னதால் புகார் செய்தோம் .
கரோனா காலத்தால் புகார் பதி யப்படாமல் இழுத்துக் கொண்டே போனதால் 15 நாட் களுக்கு முன் காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப் பட்டது . மேலும் தியாக ராயநகர் காவல்துறை துணை ஆணையரி டமும் தகவல் தெரிவிக்கப் பட்டது .
பாண்டி பஜார் காவல் நிலையத் துக்குப் புகாரை அனுப்பி விசாரிக்க உத்தர விட்டார் . முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர் . கிஷன் ரெட்டி மத்திய அமைச்ச ராகி தன் உதவியாளர் பொறுப்பில் இருந்து நரோத் தமனை நீக்கி விட்டார் . இந்த முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் பிணை மனுத் தாக்கல் செய்தனர் . மனு தள்ளுபடியானதால் அனை வரும் தலைமறைவாகி விட் டனர் .
ஆயினும் முதற்கட்டமாக விடுதி யில் இருக்கும் ' சிசிடிவி ' கேமரா பதிவு களை காவல்துறை ஆய்வு செய்து பதிவுகளைப் பெற்றுள் ளனர் . அடுத்த கட்டமாக விசாரணை நடக் கிறது . இவ்வாறு அவர் கூறினார் .

 

Tags :

Share via

More stories

Logo