ஃபெஞ்சல் புயல் ஒரே இடத்தில் கடந்த 12 மணி நேரமாக நகராமல் இருப்பதால் வலுவிழப்பதில் தாமதம்
ஃபெஞ்சல் புயல் ஒரே இடத்தில் கடந்த 12 மணி நேரமாக நகராமல் இருப்பதால் வலுவிழப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்றிரவு 11.30 மணியளவில் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், கடலூருக்கு வடக்கே 30 கி.மீ. தொலைவில் தற்போது நகராமல் உள்ளது. புயலின் மையப்பகுதி முழுமையாக கரையைக் கடந்தாலும் தரைப்பரப்பிலேயே நீடிக்கிறது. இது படிப்படியாக வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : ஃபெஞ்சல் புயல் ஒரே இடத்தில் கடந்த 12 மணி நேரமாக நகராமல் இருப்பதால் வலுவிழப்பதில் தாமதம்