மதுரையில் இன்று மதுக்கடைகள் மூடல்

by Staff / 27-10-2023 11:57:46am
மதுரையில் இன்று மதுக்கடைகள் மூடல்

மருது பாண்டியர்கள் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அக்டோபர் 27, 29, 30 ஆகிய தேதிகளில் அனைத்து மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மனமகிழ் மன்றங்கள், பார்கள் உள்ளிட்டவையும் 29, 30 ஆகிய தேதிகளில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30ஆம் தேதி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு கட்சி பிரமுகர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். மேலும், குருபூஜையை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo