குடியரசுத் தலைவரை சந்திக்கும் நடிகர் ரஜினிகாந்த்

2 நாள் அரசுமுறை பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னை வந்துள்ளார். நேற்று மாலை சென்னை வந்த அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த நிலையில், இன்று நடைபெறும் கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதன்பின் இன்று மாலை தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். இதனிடையே, குடியரசுத் தலைவர் முர்முவை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நடிகர் ரஜினிகாந்த், 'தலைவர் 170' படத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்து வருகிறார்.
Tags :