எந்த மாற்றத்தையும் கொடுக்காத பட்ஜெட்- சசிதரூர்
எந்த மாற்றத்தையும் கொடுக்காத பட்ஜெட் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் விமர்சித்துள்ளார். மேலும் அவர், "சாமானியக் குடிமகனின் பிரச்சனை எதற்கும் இந்த பட்ஜெட் தீர்வை வழங்கவில்லை. 100 நாள் வேலைத்திட்டம் MNREGA பற்றி பட்ஜெட்டில் ஒரு வார்த்தை கூட இல்லை. சாமானியனின் வருமானத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் ஒன்றும் இல்லை. வருமானங்களுக்கு இடையே நிலவும் பெரும் இடைவெளியை குறைப்பதற்கு இந்த அரசு எதுவும் செய்யவில்லை" என்று கடுமையாக சாடியுள்ளார்.
Tags :