மின் ஊழியர்களோடு கூலிவேலைக்குப்போன 17 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
தென்காசி மாவட்டம் மேலகரம் சேனைத்தலைவர் தெருவில் வசித்து வரும் அருணாசலம் சண்முகசுந்தரி தம்பதியினர் மகன் நாகராஜ் (வயது 17) தனியார் தொழிற்பயிற்சி பள்ளியில் மெக்கானிக் பிரிவில் படித்து வருகிறார். விடுமுறை தினங்களில் அப்பகுதியில் மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரோடு தொடர்ந்து ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய் சம்பளம் தருகிறேன் விடுமுறை நாட்களில் என் உடன் வா என்று இச்சிறுவனை குடும்ப சூழ்நிலை கருதி அழைத்து சென்றுள்ளார். சிறுவனும் விடுமுறை நாள்களில் மின் வாரியம் சம்பந்தமான வேலைகளில் ஈடுபடசெல்வைத்து வழக்கமாக இருந்துவருகிறது,இந்தநிலையில் இன்று ஆயிப்பேரி பகுதியில் உயர் மின் கம்பத்தில் இச்சிறுவனை ஏறி மின் சம்பந்தமான குறைகளை போக்கும் வேலையை செய்ய சொல்லி இருக்கிறார்கள். கீழே இருந்த மின் ஊழியர்கள் மின் கம்பம் மேலே சென்ற சிறுவனின் கையில் எந்தவித பாதுகாப்பு உபகாரணங்களுமில்லை, கையுறையும் அணியவில்லை எந்த வித முன்னெச்சரிக்கை உபகரணமும் பயன்படுத்தவில்லை. மேலே மின்கம்பியிலிருந்து வெளியேறிய மின்சாரம் எதிர்பாராதவிதமாக சிறுவனைத்தாக்கியதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு மரணம் அடைந்தார். உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிறுவனின் உடலைக்கொண்டுவந்த மின் ஊழியர்கள் சிறுவனின் பெற்றோர்களுக்கு உங்கள் சிறுவன் கீழே விழுந்து விட்டார் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் வாருங்கள் என்று தகவல் சொல்லி இருக்கிறார்கள், இறந்து விட்டதாக எந்தவித தகவலும் பெற்றோர்களுக்கு தெரிவிக்கவில்லை. தற்போது சிறுவன் உடல் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பிணவறையில் இருக்கிறது. இது சம்பந்தமாக தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக இறந்த சிறுவனின் குடும்பத்தாரிடம் மின்சார வாரிய ஊழியர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளது.
Tags :