நீலகிரி பயணம் ரத்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்தார். நேற்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்ற அவர், பின் கோவைக்கு புறப்பட்டு சென்று ஈஷா மையத்தின் சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொண்டார். பின்னர் இன்று அவர் நீலகிரி செல்ல இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக நீலகிரி பயணம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து கோவையில் இருந்து பகல் 12.15 மணிக்கு அவர் டெல்லி புறப்படவுள்ளார்.
Tags :