நடிகர் சிவாஜியின அன்னை இல்லத்தை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீடு தனக்கு சொந்தமானது என்று நடிகர் பிரபு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அன்னை இல்லம் தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. முன்னதாக தனபாக்கியம் நிறுவனம் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.
Tags :