போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து சிக்கும் கிருஷ்ணா?

முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாந்திடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, நுங்கம்பாக்கம் போலீசார் நடிகர் ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீகாந்தை வைத்து 'தீங்கரை' என்ற படத்தை பிரசாந்த் எடுத்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையில், 'கழுகு' பட ஹீரோ கிருஷ்ணாவுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :