100 நாள் வேலைத்திட்ட பணமில்லை? பணமில்லையா.. அல்லது மனமில்லையா? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.

by Editor / 29-03-2025 09:04:26am
100 நாள் வேலைத்திட்ட பணமில்லை? பணமில்லையா.. அல்லது மனமில்லையா? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கேள்வி.

100 நாள் வேலைத்திட்டத்தின் மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இரக்கமற்ற பாஜக அரசு இறங்கியிருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்த எக்ஸ் பதிவில், காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை. வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா? என கேள்வியெழுப்பியுள்ளார்.தமிழ் நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புக்களும்ஏழை மக்களும் எழுப்பும் குரல் டெல்லியைஎட்டட்டும்...பிஜேபி அரசின் மனம் இரங்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
 

 

Tags : 100 நாள் வேலைத்திட்ட பணமில்லை? பணமில்லையா.. அல்லது மனமில்லையா? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.

Share via