நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு

மக்களவை தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான நபரிடம் இருந்து ரயிலில் ரூ. 4 கோடி பிடிக்கப்பட்ட வழக்கில் அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று போலீசாரின் விசாரணைக்கு அவர் ஆஜராகாத நிலையில் 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில் நயினார் நாகேந்திரனுக்கு இவ்வழக்கில் மேலும் ஒரு சம்மன் அனுப்ப தாம்பரம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Tags :