இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு செம்மொழி இலக்கிய விருதுடன் 5 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு- முதலமைச்சர் மு .க. ஸ்டாலின்

by Admin / 18-01-2026 03:37:31pm
இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு செம்மொழி இலக்கிய விருதுடன் 5 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு-  முதலமைச்சர் மு .க. ஸ்டாலின்

இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நான்காவது சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு செம்மொழி இலக்கிய விருது வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.  இவ்விருதுடன் 5 லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என்றும்  இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக இனி ஒவ்வொரு ஆண்டும்  இந்த செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.  மத்திய அரசின் சாகித்திய அகடாமி விருதுகள் அறிவிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் அரசியல் குறிக்கீடுகளுக்கு பொருத்தமான இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் புத்தகப் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழ் இலக்கியங்களை உலக மொழிகளுக்கு கொண்டு செல்லும் நோக்கில் இக் கண்காட்சி அமையப் பெற்றுள்ளது.தமிழ் பதிப்பாளர்களின் பங்கேற்பு ஆகியவற்றில் தொடர் பங்கேற்பனை உறுதி செய்வதற்கு துருக்கிm மலேசியாm தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு  ஒப்பந்தங்களும்   மேற்கொள்ளப்பட்டன.

இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு செம்மொழி இலக்கிய விருதுடன் 5 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு-  முதலமைச்சர் மு .க. ஸ்டாலின்
 
Tags :

Share via

More stories

Logo