திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்து அமைப்பினரே இல்லை. - சேகர்பாபு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்து அமைப்பினரே இல்லை என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். போராட்டம் என்ற பெயரில் பாஜகவினர் திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். திருப்பரங்குன்றம் பிரச்சனை தேவையற்ற பிரச்சனை என்று அப்பகுதி மக்களே கருத்து சொல்கிறார்கள். வட மாநிலத்தைப் போல கலவரத்தை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சிக்கிறார்கள், தமிழகம் திராவிட மண்... இதுபோன்ற கலவர முயற்சியை அனுமதிக்காது என -அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
Tags : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்து அமைப்பினரே இல்லை. - சேகர்பாபு