மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

by Editor / 31-08-2024 12:08:20am
 மாநகராட்சி அலுவலகத்தில்  தூய்மை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தூய்மை பணியாளர் பாலசுப்ரமணியன் என்ற இளைஞர் மாநகராட்சி அதிகாரிகளின் உத்தரவுப்படி அங்கிருந்த நிழல் தரும் மரங்களை வெட்ட சொல்லி உள்ளனர் என்று கூறப்படுகிறது.அந்நிகழ்வின் போது மரத்திலிருந்து விழுந்து தூய்மை பணியாளர்  சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார் ... 
மாநகராட்சியின் இந்த அலட்சிய போக்கினை கண்டித்து மாநகராட்சி தூய்மை தொழிலாளர்கள் 523 பேர் இரு தினங்களாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் மாநகராட்சி மேயர்., மற்றும் மாநகர கமிஷனர் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டதாக கூறப்ப்டுகிறது.இதனை கண்டித்து  இன்று காலை முதல் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். 

 

Tags : மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

Share via

More stories