ரஷ்யா மீது சிங்கப்பூர் அரசு பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிப்பு

by Admin / 06-03-2022 02:33:07pm
ரஷ்யா மீது சிங்கப்பூர் அரசு பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிப்பு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை கண்டித்து சிங்கப்பூர் அரசு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

ரஷ்ய வங்கிகளின் செயல்பாடுகளை முடக்குவதாகவும்  அதன் மீது பொருளாதார நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

மேலும் ரஷ்யாவுக்கான எலக்ட்ரானிக் பொருள்கள் கணினி தொலைத்தொடர்பு சாதனங்கள் ராணுவ தளவாடங்கள் உள்ளிட்டவைகள் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக அரசு அறிவித்துள்ளது.

சர்வதேச சட்டங்களை விதி மீறல் செய்து உள்ளதாகவும் அமைதி போக்கை கடைபிடிக்க வேண்டும் என சிங்கப்பூர் வெளியுறவு துறை வலியுறுத்தியுள்ளது

 

Tags :

Share via