கொடைக்கானலில் அதிக கட்டணம் வசூல்
தொடர் விடுமுறை காரணமாக மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை தந்துள்ளனர். இந்நிலையில், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்குள் செல்ல பழைய முறை நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படும் என மாவட்ட வன அலுவலர் அறிவித்திருந்த நிலையில், மீண்டும் கட்டணம் உயர்த்தி இருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடந்துள்ளனர். மேலும், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர்சதுக்கம், தூண்பாறை, பைன்பாரஸ்ட், குணாகுகை ஆகிய சுற்றுலா தலங்களுக்கு தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
Tags :