தமிழகத்தில் இன்று தொடங்கும் கனமழை டிசம்பர் 16ஆம் தேதியும் நீடிக்கும்

by Editor / 11-12-2024 10:58:09am
தமிழகத்தில் இன்று தொடங்கும் கனமழை டிசம்பர் 16ஆம் தேதியும் நீடிக்கும்

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு.ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு நோக்கி வரக் கூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.சென்னையில் மெரினா, கிண்டி, வேளச்சேரி, பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் 12 முதல் 20 செ.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரங்ச் அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னை,செங்கல்பட்டு,காஞ்சி, திருவள்ளூர், கடலூர்,விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உட்பட 11 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.

 

Tags : தமிழகத்தில் இன்று தொடங்கும் கனமழை டிசம்பர் 16ஆம் தேதியும் நீடிக்கும்

Share via

More stories