அரசு பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை
ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை புவனேஸ்வரி என்பவர் நேற்று மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கணவன் மனோகர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில் மனைவி புவனேஸ்வரி இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட கணவர் மனோகரன் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பளார் ஆறுமுகம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Tags :



















