இலக்கியத்திற்கான நோபல் பரிசை  வென்ற அப்துல் ரசாக் குர்னா

by Editor / 07-10-2021 06:36:19pm
இலக்கியத்திற்கான நோபல் பரிசை  வென்ற அப்துல் ரசாக் குர்னா


இந்தாண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, தான்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அக்.,04 முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.


 அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (அக்.,07) இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 2021ம் ஆண்டிற்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசானது எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தான்சானியா நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னா, தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

21 வயதில் இருந்து பல நாவல்களை எழுதியுள்ள அப்துல் ரசாக்கிற்கு வளைகுடா நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து செல்லும் மக்களின் வாழ்வியல் பற்றிய நாவலுக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

 

Tags :

Share via