கடன் மேல் கடன் - குடும்பத்துடன் தற்கொலை

சென்னை மணலியைச் சேர்ந்த துணி வியாபாரி ஜெகன்நாதன் (40). இவர் தனது தொழில் வளர்ச்சிக்காக கடன் வாங்கியுள்ளார். ஆனால், தொழிலில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், வாங்கிய கடனையும் அடைக்க முடியவில்லை. இதனால், வேறு ஒருவரிடம் கடன் வாங்கி பாதி கடனை அடைத்துள்ளார். இப்படி தொடர்ந்து, கடன் மேல் கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் இன்று அவர் தனது மனைவி லோகேஸ்வரி (35), மகள் கவிதா (12) ஆகியோருடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Tags :