நிதி ஆயோக்கின் புதிய தலைவர் நியமனம்

நிதி ஆயோக்கின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பிவிஆர் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பரமேஸ்வரன் ஐயருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். பணியாளர் அமைச்சகத்தின் உத்தரவின்படி, ஆந்திராவை சேர்ந்த பி.வி.ஆர்.சுப்ரமணியத்தை நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள உலக வங்கி தலைமையகத்தில் முன்னாள் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பரமேஸ்வரன் ஐயர் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டதை அடுத்து நிதி ஆயோக்கிற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டார்.
Tags :