தண்டவாள பராமரிப்பு காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்து ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு.
திண்டுக்கல் - திருச்சிராப்பள்ளி பிரிவில் தண்டவாள பராமரிப்பு காரணமாக, 03.12.2024 அன்று செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயில் எண்.16848 செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக திருப்பி விடப்படும். கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை சந்திப்பு, கொடைக்கானல் சாலை,திண்டுக்கல் சந்திப்பு. வடமதுரை, வையம்பட்டி மற்றும் மணப்பாறை ஆகிய நிறுத்துங்கள் தவிர்க்கப்படும் எனவும், மேலும் இந்த ரயிலுக்கு மானாமதுரை மற்றும் காரைக்குடியில் கூடுதல் நிறுத்தங்கள் இருக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags : தண்டவாள பராமரிப்பு காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்து ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு.