பாலியல் வழக்கில் பாஜக எம்.எல்.ஏவுக்கு 25 ஆண்டு சிறை

by Staff / 15-12-2023 05:20:54pm
பாலியல் வழக்கில் பாஜக எம்.எல்.ஏவுக்கு 25 ஆண்டு சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் உத்திர பிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ.ராம்துலார் கோண்டுவுக்கு 25 வருட சிறை தண்டனை விதித்து அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு சிறுமியை பாலியல் தொல்லை செய்த வழக்கில், பாஜக எம்.எல்.ஏ ராம்துலார் கோண்டு கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தற்போது நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, எம்.எல்.ஏ பதவியை இழந்துள்ளார். 25 ஆண்டு சிறை தண்டனை மக்கள் வரவேற்றுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo