அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் மோசடி நபர்களை காவல்துறை கைது செய்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த 29.06.2022ம் தேதி மல்லீஸ்வரி (45) க/பெ. செந்தில்குமார், பழனி. 2) சங்கர் ராஜா (39), த/பெ..வெள்ளைச்சாமி, தாராபுரம், திருப்பூர் மாவட்டம் ஆகிய இருவரும் மதுரையை சேர்ந்த செல்வராஜ் மகள் மாதங்கி என்பவரிடம் ஊரக வளர்ச்சித்துறையில் உதவி செயல் அலுவலர் (Asst. Executive Officer) வேலை வாங்கி தருவதாக பணம் ரூ.7,50,000/- பெற்றுக்கொண்டு போலி பணி நியமன ஆணை கொடுத்து ஏமாற்றியதாக திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் எதிரிகள் இருவரும் சுமார் 110 நபர்களிடம் இதே போன்று அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.8 கோடி வரை பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளது தெரியவந்தது..
இதுவரையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் சுமார் 27 புகார்கள் பெறப்பட்ட நிலையில் இதே போன்று வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் பெற்றுக்கொண்டது சம்மந்தமாக சங்கர் ராஜா என்பவர் மீது கோயம்புத்தூர் பெருநகர குற்றப்பிரிவில் 5 வழக்குகளும், கோயம்புத்தூர் ராமநாதபுரத்தில் 1 வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ள நிலையில் எதிரிகள் தொடர்ந்து தலைமறைவாகி இருந்துள்ளனர்.
. இவ்வழக்கு சம்மந்தமாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்திரவின்பேரில் மேற்படி எதிரிகளை 27.07.23ம் தேதி கைது செய்து விசாரணைக்குப் பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
Tags :















.jpg)


.jpg)
