உயிரிழந்த குழந்தை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கொடுக்க முடியாதா?  உயர் நீதிமன்ற மதுரை அமர்வு .

by Staff / 21-08-2024 02:31:31pm
உயிரிழந்த குழந்தை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கொடுக்க முடியாதா?  உயர் நீதிமன்ற மதுரை அமர்வு .

மதுரை அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் சுவர் இடிந்து இறந்த குழந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட வழக்கு விசாரணையில், மேல்முறையீடு செய்த தமிழக அரசுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து   உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.. சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுப்பதற்கு அரசிடம் நிதி உள்ளது, சுவர் இடிந்து உயிரிழந்த குழந்தை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கொடுக்க முடியாதா?என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.. .

 

Tags :

Share via