பாஜகவுக்கு உடந்தை? காங்கிரஸ் வேட்பாளர் சஸ்பெண்ட்

by Staff / 27-04-2024 02:52:52pm
பாஜகவுக்கு உடந்தை? காங்கிரஸ் வேட்பாளர் சஸ்பெண்ட்

சூரத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் இருந்த சாட்சி கையெழுத்துகள், தங்களுடையது இல்லை என 3 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததால், வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால், பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றார். இந்நிலையில், கும்பானியை 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்திருக்கிறது காங்கிரஸ். ஒன்று அவர் பாஜகவுக்கு உடைந்தையாக செயல்பட்டிருக்க வேண்டும் இல்லையென்றால் கவனக் குறைவாக இருந்திருக்க வேண்டும் என காரணம் கூறியிருக்கிறது காங்கிரஸ்.

 

Tags :

Share via