நடிகை திரிஷா வழக்கறிஞர் ஓர் அதிகாரப்பூர்வமான கண்டன அறிக்கை

by Admin / 16-02-2026 07:28:25pm
 நடிகை திரிஷா வழக்கறிஞர் ஓர் அதிகாரப்பூர்வமான கண்டன அறிக்கை

இன்று நடிகை திரிஷா வழக்கறிஞர் நித்யேஷ் நடராஜ் ஓர் அதிகாரப்பூர்வமான கண்டன அறிக்கை .தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நைனார் நாகேந்திரனுக்கு எதிராக வெளியிட்டுள்ளார். அண்மையில் ,சேலத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் மூன்று அரசியல் கட்சிகளை விமர்சித்து பேசி இருந்தார். இதற்கு எதிர்வினை ஆற்றும் முகமாக விஜயை குறித்து, முதலில் அவர் திரிஷாவை விட்டு வெளியே வரட்டும் என்று பேசி இருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ,பெண்ணுரிமை இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் திரிஷாவின் கருத்தாக, திரிஷா எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு கொண்டவர் அல்ல என்றும் எப்போதும் நடுநிலையான போக்கையை கடைபிடித்து வருகிறார் என்றும் தன்னை அரசியலுடன் இணைத்து பார்க்காமல் தனது திரைப் பயணத்தின் மூலமாக மட்டுமே அடையாளப்படுத்த வேண்டும் என்று விருப்பம் கொண்டு உள்ளார் என்றும் பொது வழியில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் பொறுப்புடனும் கண்ணியத்துடனும் பேச வேண்டும் என்றும் தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கை அரசியல் விமர்சனங்களுக்குள் இழுப்பது கண்டிக்கத்தக்கது என்றும்  அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. இதனோடு ஒட்டி சமூக வலைதள பக்கத்தில் மரியாதை குறைவான செயல்கள் எப்போதும் தட்டிக் கேட்கப்படும் என்றும் திரிஷா பதிவிட்டுள்ளார்.

 நடிகை திரிஷா வழக்கறிஞர் ஓர் அதிகாரப்பூர்வமான கண்டன அறிக்கை
 

Tags :

Share via

More stories

Logo