யோகா செய்ய இடைவேளை; அரசு துறைகளுக்கு உத்தரவு
யோகா பயிற்சி செய்வதற்காக ஊழியர்களுக்கு ஐந்து நிமிட இடைவேளை அளிக்கும் திட்டத்தை ஊக்குவிக்கும்படி, இதர அரசு துறைகளுக்கு மத்திய பணியாளர் நலத் துறை நேற்று உத்தரவு பிறப்பித்தது.ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் 2019ம் ஆண்டு, 'ஒய் - பிரேக்' எனப்படும் யோகா பயிற்சி செய்ய ஐந்து நிமிட இடைவேளை வழங்கும் திட்டம் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது.இந்த திட்டம் கடந்த ஆண்டு ஜன., ல் டில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் கோல்கட்டா உள்ளிட்ட ஆறு நகரங்களிலும் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே கடந்த வாரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, ஒய் - பிரேக் என்ற ஆண்ட்ராய்டு செயலியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிமுகம் செய்தது.இந்நிலையில் யோகா பயிற்சி செய்ய ஐந்து நிமிட இடைவேளை வழங்கும் திட்டத்தை ஊக்குவிக்குமாறு, இதர அரசு துறைகளுக்கு மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
Tags :
















.jpg)


