திமுகவினர்இடையே கடுமையான மோதல் கடையநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு

by Editor / 05-11-2022 08:49:01am
 திமுகவினர்இடையே கடுமையான மோதல் கடையநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியை தென்காசி தெற்கு மாவட்டத்துடன் இணைத்த பின்பு, முதல் முதலாக கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வருகை தந்த போது மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவினர் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவத்தால் கடையநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் நியமனம் தொடர்பாக எழுந்த பல்வேறு பிரச்சினைகளைத் தொடர்ந்து, தென்காசி வடக்கு மாவட்டத்தில் இருந்த கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியை, தெற்கு மாவட்டத்துடன் இணைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டது.

 அதனைத் தொடர்ந்து, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளரான சிவபத்மநாதன் இன்று கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையநல்லூர் பகுதிக்கு திமுகவின் மூத்த உறுப்பினர் பிச்சைகனி என்பவருக்கு பொற்கிளி வழங்குவதற்காக வருகை தந்தார். இந்த நிலையில், மாவட்ட செயலாளரை வரவேற்பதற்காக கடையநல்லூர் பகுதியில் திமுகவினர் ஸ்பேனர் வைத்துள்ளனர்.

 இந்த ஸ்பேனர் வைப்பது தொடர்பாக, கடையநல்லூர் முன்னாள் நகர செயலாளரான சேகனா என்பவருக்கும், தற்போதைய நகர செயலாளராக இருக்கும் அப்பாஸ் என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

 இந்த பிரச்சனை தொடர்பாக முன்னாள் நகர செயலாளர் சேகனா வைக்கப்பட்டிருந்த பேனரானது இன்று காலை கிழிக்கப்பட்ட சூழலில், அதற்கு மாற்று ஸ்பேனர் வைக்கப்பட்டன.

 இந்த நிலையில், அதே இடத்தில் தற்போதைய நகர செயலாளர் அப்பாஸ் பேனர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேகனா தரப்பினரும், அப்பாஸ் தரப்பினரும் மாற்றி மாற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து, மாவட்ட செயலாளரான சிவபத்மநாதன் வருகை தந்த போது அவருக்கு முன்பே இரு தரப்பினை சேர்ந்தவர்களும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

 இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் வரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாவட்டத்தில் இருந்த கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியை, தென்காசி தெற்கு மாவட்டத்துடன் இணைத்து முதல் முதலாக மாவட்ட செயலாளர் வருகை தந்த போது, கட்சியினரிடையே ஏற்பட்ட அடிதடி சம்பவம் திமுகவினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 திமுகவினர்இடையே கடுமையான மோதல் கடையநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு
 

Tags :

Share via