உயிரிழப்பை ஏற்படுத்தும் கருப்பை புற்று நோய்

by Editor / 05-09-2021 08:05:41pm
உயிரிழப்பை ஏற்படுத்தும் கருப்பை புற்று நோய்

கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், கருமுட்டையில் இருந்து உருவாகும் புற்றுநோய் என மூன்று வகை புற்று நோய்கள் உள்ளன. இந்த புற்றுநோய் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை எனவே உயிரிழப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து கருப்பைக்கு செல்லும் பாதையில் செல்களின் வளர்ச்சி அதிகமாக இருப்பதால் இந்த புற்று நோய் ஏற்படுகிறது. கருப்பை புற்று நோய் அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாததால் உயிரிழப்புகள் அதிகமாகின்றன. இந்த புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருப்பது இந்த புற்றுநோய் வராமல் பாதுகாக்க உதவும். மாதவிடாய் காலங்களில் பிறப்புறுப்பை சுத்தமாக வைப்பதுடன் நாப்கிகளை 4 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ஆரம்ப கட்ட பாதுக்காப்புகள் செய்வதன் மூலம் இந்த புற்றுநோயில் இருந்து காத்துகொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புற்று நோய் குறித்த விழிப்புணர்வை கிராமபுரங்களில் ஏற்படுத்துவதால் அங்கு ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க இயலும்

 

Tags :

Share via