by Staff /
11-07-2023
02:04:33pm
ஹரியானா மாநிலம் குருகிராமில் நேற்று பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ராஜ்குமார் (வயது 23) என்ற இளைஞர் 19 வயது சிறுமியை அவரது தாயார் கண்முன்னே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவருக்கு அந்த இளம்பெண்ணுடன் நிச்சயதார்த்தம் ஆன நிலையில் திருமணத்தை நிறுத்திவிட்டு வேறு ஒருவருடன் சிறுமிக்கு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனை அறிந்து ஆத்திரமடைந்த இளைஞர் சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் இளைஞரை கைது செய்தனர்.
Tags :
Share via