வயிற்று வலியால் இளைஞர் தற்கொலை

விழுப்புரம் அருகே பெருங்கலம்பூண்டியை சேர்ந்த ஓமகேசவன் (28) கார் ஓட்டுநர். இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த ஓமகேசவன் கடந்த மார்ச். 25-ல் தற்கொலைக்கு முயன்றார். உடன் இருந்தவர்கள் அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :