25 மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்ய பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு..?

by Editor / 29-05-2025 08:44:11pm
 25 மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்ய பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு..?

பாட்டாளிமக்கள் கட்சியில் 80க்கும் மேற்ப்பட்ட மாவட்ட செயலாளர்கள் உள்ளநிலையில்  கடலூர் உள்ளிட்ட 25 மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்ய பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதற்கான பட்டியலையும் தயாரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்டோருடன் இன்று (மே 29) மாலை ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. அதன்பேரில், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், ஜி.கே.மணி, அன்பழகம், சிவப்பிரகாசம் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்தநிலையில் 

பாமக நிறுவனர் ராமதாஸின் இல்லம் அமைந்துள்ள தைலாபுரம் தோட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கிளியனூர் காவல் நிலையத்தில் இருந்து இரண்டு SI-கள் மற்றும் இரண்டு SSI-கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து தகவல் வந்ததால் பாதுகாப்புக்கு வந்ததாக காவலர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தைலாபுரம் தோட்டத்தின் வாயிலில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : 25 மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்ய பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு

Share via

More stories